அமெரிக்க அதிபருக்கு நன்றி சொல்லும் ஹாங்காங் மக்கள்

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “பெரிய பரிசை வழங்கியுள்ள அதிபர் ட்ரம்ப்க்கு நன்றி! அமெரிக்காவை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என்றும் “அதிபர் ட்ரம்ப், ஹாங்காங்குக்கு விடுதலை பெற்றுத்தாருங்கள்” என்றும் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.


னாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் கடந்த ஆறு மாதங்களாக மக்கள் போராட்டம் நடந்து வருகிறது. போராடும் மக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் வன்முறைகள் நிகழ்கின்றன. இதனிடையே அண்மையில் நடந்து முடிந்த ஹாங்காங் கவுன்சிலர் தேர்தலில், போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக உள்ள ஜனநாயகக் கட்சிகள் அமோக வெற்றி பெற்றுள்ளனர்.

இச்சூழலில் ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டரம்ப் 'ஹாங்காங் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக சட்டம் மசோதா 2019' என்ற சட்டத்தை அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளார்.

இதற்காக ஹாங்காங் மக்கள் டொனால்ட் டர்ம்ப அரசுக்கு நன்றி தெரிவிக்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியில், ஏராளமான போராட்டக்காரர்கள் ட்ரம்ப்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பதாகைகளைத் தாக்கியிருந்தனர். பலர் நன்றி தெரிவிக்கும் வாசகங்கள் அச்சிட்ட டி-சர்ட் அணிந்திருந்தனர்.