கடத்தல் கும்பலுடன் மெக்சிகோ போலீஸ் சண்டை: 20 பேர் பலி

இன்னும் சில நாட்களுக்கு பாதுகாப்புப் படை அந்தப் பகுதியில் இருந்து கண்காணிக்கும் என கோஹுய்லா மாகாண கவர்னர் மிகுல் ஏஞ்சல் தெரிவித்திருக்கிறார்.


மெக்சிகோவில் ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க வந்த கும்பலுடன் அந்நாட்டு போலீசார் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.


 

ஜாலிஸ்கோ மற்றும் குவானாஜுவாடோ மாகாணங்களில் இயங்கும் கடத்தல் கும்பல்களுக்கு இடையே போட்டி நடப்பதாகவும் ஒருவரையொருவர் ரகசியமாகக் கொன்று குவிப்பதாகவும் கூறப்படுகிறது.

அவர்களால் மர்மமான முறையில் கொல்லப்பட்டு ரகசியக் கல்லறைகளில் புதைக்கப்பட்டவர்களின் சடலங்கள் பல நகரங்களில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் 2006ஆம் ஆண்டு முதல் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரகசியக் கல்லறைகளில் 5 ஆயிரத்துக்கு அதிகமான பிணங்கள் கண்டுபிடித்து மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட பல பிணங்கள் அடையாளம் காணப்படவில்லை.